தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
முத்தங்கள்
எந்த மருத்துவரிடமும்
இதுவரை
நான் சொன்னதே இல்லை.
என் சர்க்கரைவியாதிக்கு
காரணம்
நீ தந்த
முத்தங்கள் என்பதை
மீன்பிடிக்க தடை
கருத்தரிக்கிறது
கடலில் மீன்குட்டிகள்
வீட்டில் சவப்பெட்டிகள்
திங்கள், 18 ஏப்ரல், 2011
தேசத்திற்கு வெள்ளையடிக்க
சுண்ணாம்பு துகள்கள்
இங்கு சிந்தப்படுகின்றன
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
பூட்டப்பட்ட வீடு
தாளிக்கும் நறுமணத்தை
சுவாசித்திராத
நுரையீரல்
வெளிச்சம் பூசி
அலங்கரித்துக்கொல்லாத
மின்விளக்குகள்
சூடுதணிந்து
குளிர்ந்துபோயிருக்கும்
அடுப்படி
கைமாறாட்டத்தில்
வதைபடாத
ரிமோட்
நீர்த்தெளித்து
முகம் கழுவாத
முன்றில்
கோலப்புள்ளி இடாமல்
விதவையாக காட்சிதரும்
வாசல்
போர்நிறுத்தத்தை கைவிட்டு
படையெடுக்கும்
எறும்புகள்
வீட்டிற்குள் வீட்டை
நெய்துமுடித்த
சிலந்திகள்
இறக்கையை
அசைத்துப்பார்க்காத
மின்விசிறிகள்
கிழிபடாததால்
வருத்தம் தெரிவிக்கும்
நாள்காட்டிகள்
தங்களைத் தாங்களே
வாசித்துக்கொள்ளும்
புத்தகங்கள்
களைப்பு நீங்கி
இறைவன் ஓய்வெடுக்கும்
பூஜையறை
திறவுகோலின்
கலவிக்காக எங்கும்
கதவின் துவாரம்
கர்ப்பம் தரித்த
வீட்டின்
தபால்பெட்டி
தீவிர
மெளனவிரதம் இருக்கும்
இல்லம்
மலர்ந்திருந்தும்
கிள்ளப்படாமல் இருக்கும்
பூக்கள்
கலகலப்பாய்
பேசமறந்த பாத்திரங்கள்
இப்படியாய் பலவும்...
யாருமற்ற வீடு
எனக்குப் பேச்சுத்துணையாய்
சுவர்க்கடிகாரம்
சனி, 16 ஏப்ரல், 2011
இது வரையில் பல லட்சம் தாள்களைத் தின்றிருக்கிறேன்.
நான் ஒரு கவிதைக்கழுதை
காலத்தின் ரத்தம்
உறையாமல்
காலத்தின் ரத்தம்
பெருக்கெடுத்துக்கொண்டே இருக்கிறது
கடிகார முள் கிழித்து
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)