சனி, 17 ஏப்ரல், 2010

சங்கஇலக்கியம் - குறுந்தொகை :2

சின்னஞ்சிறிய சிறகுகள்விரிய
காற்றைத்தழுவி பறந்து
பிரபஞ்சம்முழுக்க கடந்து
மலர்களின் சிம்மாசனத்தில் அமர்ந்து
நறுமணம் கொண்டு மதுரசம் உண்டு
மகிழும் வண்டே!

ஆறுதலுக்காக கூறுதலில்
பொய்வேண்டாம் மெய்பேசு!

பிறவிகளின் தொடர்ச்சியாய்
உறவுகளின் நேசம்
உணர்வுகள் நீட்சியில்
உரிமைகளே சுவாசம்.

உதடு விரித்த புன்னகையிலும்
உதடு திறந்த பொன்னகையிலும்
இறுக்கமாய் கோர்க்கப்பட்ட
முத்துப்பல்லை வரிசையைக்கொண்டு
அசைவிலும் இசைவிலும்
பொன்மயிலாய் தோகைவிரிப்பவள்
என் பெண்மயில்.!

பாதத்தைத் தொட்டுவிட எத்தனிக்கும்
அவளது
கார்கூந்தலில் நறுமணத்தைவிட
நீ பார்த்த கோடிமலர்களில்
எந்தப் பூவுக்கேனும் இருக்கிறதா?
சொல்வண்டே சொல் !

நூல்: குறுந்தொகை
ஆசிரியர்:இறையனார்
பாடல் எண்:2
பாடல்:
கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் துப்பி
காமம் செப்பாதுக் கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின்,மயில்இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

3 கருத்துகள்:

  1. நன்றி வீரா நாம் தமிழால் இணைவோம் .இயல் இசை நாடகம் முத்தமிழும் நம்மை முழுமைப்படுத்தட்டும் .

    பதிலளிநீக்கு
  2. சமகால தமிழர்களுக்காக சங்கத்தமிழ் புதுக்கவிதை வடிவில்

    பதிலளிநீக்கு