ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கொழும்பு தமிழ் சங்கத்தில் தகிதாவின் நூல் வெளியிடப்படுகிறது


தகிதா பதிப்பகத்தில் வெளியான கவிஞர் ஆதித்தன் அவர்களின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற கவிதைத் தொகுப்பு இலங்கையில் இரண்டாவது முறையாக அறிமுகவிழா காணுகிறது.கவிஞர் ஆதித்தன் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்

1 கருத்து:

  1. கவிஞர் ஆதித்தன் அவர்கள் 'மண் எனபது மண்ணல்ல மக்கள்' என்ற வாசகத்தின் பொருளுக்கேற்ப கவிதைப்படைக்கும் சமகால எழுத்துப்போராளி. தன் பள்ளிப்பருவத்திலிருந்து பா புனையும் ஆற்றல் பெற்ற இவர் புதுக்கவிதை மற்றும் விருத்தக் கவிதைகளின் வித்தகம் கற்றிருக்கி...றார். இந்த நூலானது ஆதித்தன் என்ற கவிஞனின் அடையாள அட்டை அல்ல; அவனது சமூகத்தின் ஆவணம். நிறைய வாசிப்பும் ,தெளிவான விமர்சிப்பும் கொண்ட உற்சாக இளைஞர் ஆதித்தன் அவர்களை வாழ்த்துகிறேன். சமீபத்திய கோவை வருகையில் போது நிறைய தகவங்களை பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது. அவரது "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் தகிதா பதிப்பகத்தில் வெளியாகி கொழும்பு தமிழ் சங்கத்தில் இரண்டாவது அறிமுகவிழா காணுகிறது. வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு