செவ்வாய், 1 ஜூன், 2010

தொடர்வண்டி குறிப்புகள்

இருவரிக்குள் ஒருவரிக்கவிதையை
எழுதிச்செல்கிறது தொடர்வண்டி.

தண்டவாளங்களோடு
இடைவிடாமல் இங்கிலீஸ்முத்தம்
கொடுக்கின்றன
இரும்புச்சக்கரங்கள்.

'தண்டவாளங்கள்'
இந்திய மண்ணின் அந்நியன் எழுதிய
உலோக வரலாறுகள்.

எல்லா மனிதர்களையும்
சுமந்தபடி நகர்கிறது
ஒரு ஜனநாயகவீதி.

தூங்கும்
ஸ்டேஷன் மாஸ்டர்களை
சங்கொலியில் எழுப்பியபடி
மின்னதிர்ச்சியில்
கதறிக்கொண்டே ஓடுகிறது
தொடர்வண்டி.

வழிநெடுக
சிலுவை மரங்களாய்
மின்சாரம் சுமக்கும்
கம்பங்கள்.

உறவுக்காரர்களை
வழியனுப்பி வைப்பதுபோல
கையசைத்து புன்னகைக்கும்
சிறார்கள்.

லட்சக்கனக்கில்
நிழல் சிதைந்த
குடைகளைப் பிடித்திருக்கும்
முட்புதர்கள்.

கைகளில்
காயக் கவிதைகளை
முட்கள் கிறுக்க
சுள்ளி பொறுக்கும் பெண்கள்.

கொள்ளை வெயிலில்
வெள்ளைக்காரன் விளையாட்டை
விளையாடும்
கறுப்புக் குழந்தைகள்.

தியானிக்கும்
மலைகள்.

இரையைத் தேடிக்கொண்டே
நகரும் ஆடுகள்.

வறண்ட தரிசுகளில்
நம்பிக்கையை விதைக்கும்
உழவர்கள்.

தூரத்தில்
தண்டவாளத்தை தாண்டும்
பள்ளித்தாமரைகள்.

எல்லோரும் குளிக்கும்
ஒரு
கிராமத்தின் பாத்ரூமாய்
தெப்பக்குளம்.

ஊர் எல்லையில்
தெருமுனையில்
கொட்டமடிக்கும் சுந்தரபுருசர்கள்.

ஆலமரத்தடியில்
அசைவற்று ஓய்வெடுக்கும்
தெய்வங்கள்.

வண்ணங்கள் தொலைத்த
புழுதிபடிந்த சோலைகள்.

கழுத்து வலிகளைத்
தங்களுக்குள்ளேயே
பரிமாறிக்கொள்ளும்
பாரம்சுமக்கும் வண்டிமாடுகள்.

ஆளரவமில்லாத
அனாதைச்சாலைகள்.

சன்னலுக்குள்ளே
கைகளை நிரப்பும்
இயலாத...
பெண்கள்-குழந்தைகள்-பெரியவர்கள்.

மனிதர்களை வள்ளலாக்க
முயற்சிசெய்து
தோற்றுப்போன பிச்சைக்காரர்கள்.

மானிடர்களின் கருணையுள்ளத்தை
சோதனைச்செய்து பார்க்கும்
குரங்குகள்.

அமுதமோ ஆலகாலமோ
உணவுப்பொட்டலங்களை விற்று
விருந்தோம்பும் சீருடைமனிதர்கள்.

வயிற்றில் கலவரம்;
இரப்பையில்
உள்ளிருப்பு போராட்டம்.

பூட்ஸ் கால்களுக்கிடையில்
தவழ்ந்தபடி
தரையைக் கூட்டிச்செல்லும்
ஊனமுற்ற சிறார்கள்.

இப்படியாய் ...
டயர் பஞ்சராகாமல்
ஓடும் தொடர்வண்டியில்
எனக்கு பிடித்தது...
தீண்டாமையை கடைப்பிடிக்காத
ஜெனரல் கம்பார்மென்ட் தான்.

5 கருத்துகள்:

  1. ஃஅன்பு மணிவண்ணன்
    தற்செயலாக தங்களின் வலைப் பூவினைப் பார்க்க நேர்ந்தது,
    நன்று தொடர்க

    கவிதைகள் இயல்பாய் உள்ளன,

    என் வலைப் பூ முகவரி பின்வருமாறு முடிந்தால் தொடருங்கள்
    manidalblogspot.com
    palaniappan
    reader intamil rajahs college
    pudukkottai

    பதிலளிநீக்கு
  2. see also
    http://sanmarkasabai.blogspot.com/
    palaniappan pudukkottai

    பதிலளிநீக்கு
  3. நண்பரே,வணக்கம்!

    எனது 'பேஸ் புக்' (facebook) வலைக்குள் நண்பராய் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி;வரவேற்கிறேன். நீங்களும் உங்கள் நண்பர்களும் அவ்வப்பொழுது இதன் மூலம் நல்ல விஷயங்களைப் பங்கிட்டு கொள்ளலாம்.

    விரைவில் என்னுடைய 'உலகத் தமிழர் மையம்'(Ulaga Thamizhar Maiyam -http://ulagathamizharmaiyam.blogspot.com) என்ற இன்னொரு 'பகிர் வலைத்தளத்தில்' நிறைய செய்திகளை, படிப்பவர்களின் மனதில் பதியும் படியான படைப்புக்களாகத் தரப் போகிறேன்.சிந்தைக்கும், சிந்தனைகளுக்கும் உரமிடக் கூடிய விஷயங்களாக அவை பரிணமித்திருக்கும்.

    கிட்டதட்ட அது ஒரு மின்னஞ்சல் இதழைப் போல உங்கள் எண்ணங்களை ஈர்க்கும் என்பது மட்டும் நிச்சயம்.அதற்கு சில நாட்கள் நீங்கள் பொறுத்திருக்க வேண்டுமே.

    மேலும் தொடர்புகளுக்கு krishnanbalaa@gmail.com என்ற இ-மெயில் முகவரியைப் பயன்படுத்தி எனக்கு நீங்கள் எழுதலாம்.மிக்க நன்றி.
    நட்புடன்,
    கிருஷ்ணன் பாலா

    எனது முகவரி:
    கிருஷ்ணன் பாலா
    282 / 1, கண்ணகி நகர்,
    பை பாஸ் சாலை அருகில்,
    தாராபுரம்-638656
    திருப்பூர் மாவட்டம்
    தமிழ் நாடு

    அலை பேசி: (00 91 ) 94440 69234
    மின்னஞ்சல்: krishnanbalaa@gmail.com
    வலைத்தளம்: http://www.ulagathamizharmaiyam.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி பழனியப்பன், உங்கள் தந்தையும் எனது ஆசானுமான ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குங்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூவினை விரைவில் நுகர்வேன். வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. என் இலக்கிய போதிமரம் கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்

    பதிலளிநீக்கு