செவ்வாய், 27 ஏப்ரல், 2010

வாழ்தல்

இன்றின் முன்னம்கிழமை
மாலைமறித்து ஜனித்தஇரவு
நீளவளர்ந்த பொழுதொன்றில்
இமைத்திறந்திருந்த நினைவுகளை
விழிக்கதவடைத்து தாலாட்டினேன்.

எனதுஊரில் எனதுபிணம்
நனைந்து கொண்டிருந்தது
இரங்கல் கண்ணீரில்.

என்
பூதவுடல் மீது
சடலங்களாய் பூவுடல்கள்.

பிழைப்பட்டது
பிறவிக்கவிதை.

உயிர்உதிர்த்து உறவிழந்து
நிலம் பிரிந்தேன்.

இப்படியாய்த் துயரத்தீயில்
எரிந்துகொண்டிருந்தது
எனதுபிணம்.

இருள்பரவிய நடுநிசியில்
பயம் வியாபித்த
மனம்
மெதுவாய் உணரத்தொடங்கியது
சாகவில்லை என்பதை.

அந்த
இரத்தலின் வலியில்
உணர்ந்தேன்
வாழ்தலின் அருமையை.
"வாழ்தலின் அருமை"

4 கருத்துகள்:

  1. தமிழோசையின் நாதம் புசித்தேன். இனிது.

    வடமொழிச்சொற்களைத் தவிர்க்கவும்.

    என்றும் அன்புடன்
    நீலமேகம்

    பதிலளிநீக்கு
  2. கனவின் கலவரம் ரசித்த நீலா அவர்களுக்கு நன்றிகள்.வடமொழி கலக்காமல் எழுதுகிறேன்.நல்ல சுட்டிக்காட்டலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. நீ பேசும் தமிழை பார்த்து நான் மெய் சிலிர்க்கிறேன் .. என்றும் நலமுடன் வாழ்க ..

    பதிலளிநீக்கு
  4. தோழா நம்மை இணைத்தது நமது தாய்த்தமிழ் தான். தமிழோடு இணைந்திருப்போம் ;தமிழையே சுகித்திருப்போம் .நன்றிகள். இந்த பக்கங்களை உங்கள் நண்பர்களுக்கு சொல்லி சங்கத்தமிழை வாசிக்க பழக்குங்கள்

    பதிலளிநீக்கு